இலங்கை

ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள்

கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர் ஒருவர் தாங்கியிரு

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•புதன், 27 ஆகஸ்ட், 2025
5392 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள்
ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்கள்
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர் ஒருவர் தாங்கியிருந்த பதாதை ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

கைது செய்யப்பட்டு நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப்பிடம் (Donald Trump) உதவி கோரும் வகையிலான பதாதை ஒன்றை ரணிலின் ஆதரவாளர் ஒருவர் வைத்திருந்தார்.

குறித்த பதாதையில் “ட்ரம்ப், தயவு செய்து ரணிலுக்கு உதவுங்கள்“ (TRUMP PLEASE HELP RANIL) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை