இலங்கை

சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி.

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•வியாழன், 14 ஆகஸ்ட், 2025
2093 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி.
சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி.
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். தற்போது ஆண்டுதோறும் 15,000-க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

அதன்படி, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு யாத்திரையை இலங்கை அரசு புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான யோசனையை, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை