Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி....

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Thursday, August 14, 2025
1572 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி....
சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி. (Thayaka Tamil)

Sri Lanka News Desk: இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் இந்து பக்தர்கள்…

சபரிமலை ஐயப்பன் யாத்திரை புனித தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி. was officially reported by Thayaka Tamil News Media Network.

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். தற்போது ஆண்டுதோறும் 15,000-க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

அதன்படி, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு யாத்திரையை இலங்கை அரசு புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான யோசனையை, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka