Sri Lanka: மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் தொடரும் கொடூரம்: மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்க...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நீண்ட காலமாகியும் முறையான தீர்வு எட்டப்படாத நிலையில், அப்பகுதியில் தொடர்ந்தும் கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டு…
மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் தொடரும் கொடூரம்: மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் சுட்டுக் கொலை! was officially reported by Thayaka Tamil News Media Network.
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நீண்ட காலமாகியும் முறையான தீர்வு எட்டப்படாத நிலையில், அப்பகுதியில் தொடர்ந்தும் கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (12.11.2026) மாலை வழக்கம்போல் மேய்ச்சலுக்காகச் சென்ற கால்நடைகளில் இரண்டு பசுக்கள், அப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சந்திவெளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான குறித்த இரண்டு பசுக்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய இழப்பு 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக மயிலத்தமடு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றவேளை, அவர்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்ய மறுத்ததுடன், கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அனுப்பியதாகப் பாதிக்கப்பட்ட பண்ணையாளர் மேலும் குற்றம் சாட்டினார். நாட்டின் ஜனாதிபதி வரைக்கும் இப்பிரச்சினையை எடுத்துச் சென்றும், பலத்த போராட்டங்களை முன்னெடுத்தும் தங்களது வாழ்வாதாரமான கால்நடைகள் தொடர்ந்தும் இவ்வாறு கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டு வருவது தங்களை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளதாகப் பண்ணையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
