“எரிபொருளைச் சேமிக்கப் புதிய நடைமுறை!” – அரச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்பபடும்; சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் தற்போது தீவிரமடைந்துள்ள எரிசக்தி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு (Clinic) வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்குப் பதிலாக இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. (தொடர்ந்து வாசிக்க…)

இந்தத் தீர்மானம் மற்றும் தற்போதைய சுகாதார நிலைவரம் குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, நோயாளர்கள் அடிக்கடி வைத்தியசாலைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, எரிசக்தி முகாமைத்துவத்தை (Energy Management) வலுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கிளினிக்குகள் செயற்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை நோயாளர்களுக்கும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இருப்பினும், நோயாளர்களுக்கு ஏதேனும் அவசர உடல்நலப் பாதிப்புகள் அல்லது மேலதிகத் தேவைகள் ஏற்படின், அவர்கள் வழமை போன்று எந்த நேரத்திலும் கிளினிக்குகளுக்குச் செல்ல முடியும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எரிசக்தி நெருக்கடியால் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் சத்திரசிகிச்சை (Surgery) நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement