வாகரையில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து அதிகாரிகள் அச்சுறுத்தல்: தோணிதாண்டமடுவிற்கு விரைந்து சென்று நேரில் ஆராய்ந்தார் சிறிநாத் எம்.பி.!

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தோணிதாண்டமடு எல்லைக் கிராமத்தில் அதிகாரிகள் சிலர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உடனடியாக நேரில் சென்று கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் மக்கள் சந்திப்பு நேற்று (செப்டம்பர் 06) பிற்பகல் வேளையில் தோணிதாண்டமடு கிராமத்திற்குள் நுழைந்த அதிகாரிகள் சிலர், பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் இ.சிவேந்திரன் ஊடாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மக்களின் கோரிக்கையும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளும் இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த கிராம மக்கள், “நாங்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருகிறோம். இதனால் இரவு வேளைகளில் கடும் அச்சத்திலேயே வாழ வேண்டியுள்ளது. இதற்கு உடனடியாக ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் மக்களுடன் இணைந்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி, மக்களுக்குச் சுமுகமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement