இலங்கை

தலைக்கவசமின்றி மற்றும் முறையற்ற பயணங்களை மேற்கொண்டோருக்கு கல்முனையில் வீதிப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கல்!

வீதி விபத்துகளைக் குறைத்துப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் “பாதுகாப்பான போக்குவரத்து” எனு

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•வெள்ளி, 13 நவம்பர், 2026
5811 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
தலைக்கவசமின்றி மற்றும் முறையற்ற பயணங்களை மேற்கொண்டோருக்கு கல்முனையில் வீதிப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கல்!
தலைக்கவசமின்றி மற்றும் முறையற்ற பயணங்களை மேற்கொண்டோருக்கு கல்முனையில் வீதிப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கல்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

வீதி விபத்துகளைக் குறைத்துப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் “பாதுகாப்பான போக்குவரத்து” எனும் விசேட விழிப்புணர்வு கள நடவடிக்கை கல்முனை நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாத் இந்நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸாரும் இணைந்து இக் கள நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாத், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல். லபீர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இச்செயற்திட்டத்தின்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் அடையாளம் காணப்பட்டன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களின் பின் ஆசனத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்து பயணம் செய்தல், சிறுபிள்ளைகள் தலைக்கவசமின்றிப் பயணம் செய்தல், மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் (Tank) சிறு குழந்தைகளை ஏற்றிச் செல்லல் மற்றும் தலைக்கவசப் பட்டிகளைச் சரியாக அணியாது பயணம் செய்தல் போன்ற தவறுகள் இதன்போது அவதானிக்கப்பட்டன.

இத்தகைய தவறுகளுடன் பயணித்தவர்கள் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமுறைகளின் அவசியமும் விபத்துகளால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளும் அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன், வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துவது தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. வீதி விபத்துகளற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இக் கள நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வையும் வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை