இலங்கை

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் கல்வி மற்றும் தொழில்துறையில் உயர்ந்த நிலையை அடைவது அவசியம்: பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா!

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித் தொடரின் கிழக்கு மாகாண நிகழ்வு நேற்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•செவ்வாய், 10 நவம்பர், 2026
4692 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் கல்வி மற்றும் தொழில்துறையில் உயர்ந்த நிலையை அடைவது அவசியம்: பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா!
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் கல்வி மற்றும் தொழில்துறையில் உயர்ந்த நிலையை அடைவது அவசியம்: பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித் தொடரின் கிழக்கு மாகாண நிகழ்வு நேற்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டார். இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சூழலில் தேசிய ஒற்றுமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நிர்ப்பந்திக்கப்படும் நிலை உருவாகக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது தேசிய இளைஞர் கொள்கையின் பின்னணி, அதன் அவசியம், உருவாக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் காலவரையறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் இளைஞர் விவகாரங்களுக்கான உதவிப் பணிப்பாளர் நிமேஷ் சிவங்கர விளக்கமளித்தார். திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக QR குறியீட்டின் ஊடாக விசேட படிவங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜே. ஸ்ரீபதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி பாஹிர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் உட்படக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திரளான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை