இலங்கை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி செயலமர்வு: புதிய ‘பாடசாலை மத்தியஸ்த அலகு’ உருவாக்கம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR செயற்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான 3 நாள்

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•திங்கள், 9 நவம்பர், 2026
5194 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி செயலமர்வு: புதிய ‘பாடசாலை மத்தியஸ்த அலகு’ உருவாக்கம்!
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கான மத்தியஸ்த பயிற்சி செயலமர்வு: புதிய ‘பாடசாலை மத்தியஸ்த அலகு’ உருவாக்கம்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், SEDR செயற்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கான 3 நாள் மத்தியஸ்தப் பயிற்சி செயலமர்வு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சாரின் வழிகாட்டலில், உதவிப் பிரதேச செயலாளர் வை. ராசித் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இச்செயலமர்வு கல்லூரி அதிபர் திருமதி ஏ.எல். நசிபாவின் பங்களிப்புடன் கடந்த 2026.11.04 முதல் 2026.11.06 வரை நடைபெற்றதுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அ. பாத்திமா சினோஸ் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். அன்பாஸ், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் செல்வி வி. லாவன்யா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மினா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

மேலும், கல்முனை உப பிரதேச செயலக உத்தியோகத்தர் கே. அருள்பிரசாந்தன், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் எப்.எஸ்.எஸ். ஹசன், அக்கரைப்பற்று பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம். சங்கீதன், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப், பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு முரண்பாடுகளைத் தவிர்த்தல், முறையான தொடர்பாடல் மற்றும் கலந்துரையாடல் திறன்கள் வழியே மத்தியஸ்த முறைகளைக் கையாளும் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

செயலமர்வின் நிறைவில், கல்லூரியில் புதிய ‘பாடசாலை மத்தியஸ்த அலகு’ (School Mediation Unit) உத்தியோகப்பூர்வமாக நிறுவப்பட்டதுடன், பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை