சூர்யாவின் ‘சீன்’ (Scene) திரைப்படம் உலகளவில் ₹145 கோடியைத் தாண்டி வசூல் சாதனை!
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லேன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ (Scene) திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லேன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ (Scene) திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன் உலகளவில் சுமார் ₹145 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்திய அளவிலும் சர்வதேச சந்தைகளிலும் தொடர்ந்து கணிசமான வசூலை ஈர்த்து வரும் இத்திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக விரைவாக ₹150 கோடி இலக்கை நெருங்கும் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது.
