உலகம்

ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி ‘நியோஆன்கோவாக்’ (NeoOncoVac): ஆரம்பகட்ட ஆய்வுகளில் நம்பிக்கையூட்டும் முடிவுகள்!

ரஷ்யா உருவாக்கியுள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசியான ‘நியோஆன்கோவாக்’ (NeoOncoVac) மருத்துவப் பரிசோதனைகளில் நம்பிக்கையூட்டும் ஆரம்பகட்ட முடிவுகளை

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•ஞாயிறு, 15 நவம்பர், 2026
5309 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி ‘நியோஆன்கோவாக்’ (NeoOncoVac): ஆரம்பகட்ட ஆய்வுகளில் நம்பிக்கையூட்டும் முடிவுகள்!
ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி ‘நியோஆன்கோவாக்’ (NeoOncoVac): ஆரம்பகட்ட ஆய்வுகளில் நம்பிக்கையூட்டும் முடிவுகள்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

ரஷ்யா உருவாக்கியுள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசியான ‘நியோஆன்கோவாக்’ (NeoOncoVac) மருத்துவப் பரிசோதனைகளில் நம்பிக்கையூட்டும் ஆரம்பகட்ட முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி, தீவிர தோல் புற்றுநோயால் (Melanoma) பாதிக்கப்பட்ட 60 வயதான நோயாளி ஒருவருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நான்கு மாத பின்தொடர் ஆய்வின்போது, உடலில் புதிய புற்றுநோய்க் கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், முன்னர் கண்டறியப்பட்டிருந்த புற்றுநோய்ப் பரவல்களும் (Metastases) மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக ஆறு நோயாளிகளுக்கு இந்தப் புதிய வகை mRNA தடுப்பூசி வழங்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நோயாளியின் மரபணு மற்றும் புற்றுநோய் கட்டிகளின் தன்மைக்கு ஏற்பத் தனிப்பயனாக்கப்பட்டு இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

எவ்வாறாயினும், தற்போதைய இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் ஆரம்பகட்டமானவையே எனவும், இத்தடுப்பூசியின் முழுமையான செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விரிவான மேலதிக மருத்துவச் சான்றுகளும் நீண்டகாலப் பரிசோதனைகளும் அவசியம் எனவும் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

TAGS:
#உலகம்#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை