சீனாவின் புதிய ‘CE-25A’ மின்சார வர்த்தக விமானத்தின் முதல் ஆளுடன் கூடிய சோதனைப் பயணம் வெற்றி!
சீனாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட 19 பயணிகள் பயணிக்கக்கூடிய ‘CE-25A’ எனும் மின்சார வர்த்தக விமானம், அந்நாட்டின் ஷான்டோங் (Shandong) மாகாணத்தில் தனது முதலாவது

சீனாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட 19 பயணிகள் பயணிக்கக்கூடிய ‘CE-25A’ எனும் மின்சார வர்த்தக விமானம், அந்நாட்டின் ஷான்டோங் (Shandong) மாகாணத்தில் தனது முதலாவது ஆளுடன் கூடிய சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சுமார் 10 டன் எடையுடைய இந்த நவீன மின்சார விமானம், ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்யப்பட்டால் 400 கிலோமீட்டர் தூரம் வரை தடையின்றிப் பயணிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அத்துடன், இது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமை விமானப் போக்குவரத்துத் துறையில் சீனா எட்டியுள்ள மிக முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றமாக இச்சோதனைப் பயணம் சர்வதேச அளவில் பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் குறுகிய தூரப் பயணங்களுக்கான வர்த்தக விமானப் போக்குவரத்தில் இத்தகைய மின்சார விமானங்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் துறைசார் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
