இலங்கை

பெனகமவில் மின்சாரக் கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு: 57 வயது வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கிழக்கு வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட ரத்கித, குடாவில மற்றும் பெனகம பகுதிகளில், சட்டவிரோதமாக தனது வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி மின்சாரக் கம்பிவேலி அமைத்ததில் சிக்க

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•திங்கள், 9 நவம்பர், 2026
8275 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
பெனகமவில் மின்சாரக் கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு: 57 வயது வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!
பெனகமவில் மின்சாரக் கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு: 57 வயது வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

கிழக்கு வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட ரத்கித, குடாவில மற்றும் பெனகம பகுதிகளில், சட்டவிரோதமாக தனது வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி மின்சாரக் கம்பிவேலி அமைத்ததில் சிக்கி காட்டு யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான 57 வயதுடைய சந்தேகநபரை வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உல்ஹிட்டிய வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரி ஆர்.ஜி.எல்.பி.கே. ரணதுங்க உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகளால் இந்த சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை