இலங்கை

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN எண் கட்டாயமா? – இறைவரித் திணைக்களம் விளக்கம்!

இலங்கையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 4 மில்லியன் மக்கள் இன்னும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை…

செய்தியாளர்: மட்டக்களப்பு நிருபர்•திங்கள், 9 நவம்பர், 2026
8961 பார்வைகள்•மூலம்: தாயகத் தமிழ் (thayakatamil.com)
Read this story in other languages:
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN எண் கட்டாயமா? – இறைவரித் திணைக்களம் விளக்கம்!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN எண் கட்டாயமா? – இறைவரித் திணைக்களம் விளக்கம்!
பகிர்க:WhatsAppFacebookX (Twitter)Telegram

இலங்கையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 4 மில்லியன் மக்கள் இன்னும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை என இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, இறைவரித் திணைக்களத்தின் கொள்கை, சட்டவாக்க ஆணையாளரும் அதிகாரப்பூர்வ ஊடகப் பேச்சாளருமான நந்தன குமார இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் சுமார் 17 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ள நிலையில், அவர்களில் 13 மில்லியன் பேர் ஏற்கனவே வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற்றுள்ளதாகவும், தற்போதைய சட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த எண்ணைப் பெறுவது கட்டாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TIN அடையாள எண்ணைப் பெறுவதால் மட்டுமே ஒருவர் தானாகவே வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டின் வரி முறையைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டே இந்தச் சட்டப்பூர்வத் தேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வயது வந்த அனைவரும் பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், வரி செலுத்துவதற்கான வருமானத் தகுதிகளைக் கொண்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும், பதிவு செய்யும் செயல்முறை குறித்த தவறான புரிதல்கள் தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS:
#இலங்கை#தாயகத் தமிழ்#செய்திகள்#இலங்கை