
மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் வலியுறுத்தியுள்ளார்.