ශ්රී ලංකා පුවත්: வழியின்றி விழி பிதுங்கும் விவசாயிகள்: அக்கரைப்பற்று சாந்திபுரம் வீதியைச் சீ
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

ශ්රී ලංකා පුවත් අංශය: அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் வீதியானது பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி மிக மோசமாகக் குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரும்…
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் வீதியானது பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி மிக மோசமாகக் குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
12,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களுக்குச் செல்வதற்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்ட ஐந்து கிராமப் பொதுமக்கள் தினசரி போக்குவரத்திற்கும் இப்பிரதான வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர். அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்டதும், மாகாண சபையின் கீழ் தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பராமரிக்கப்பட வேண்டியதுமான இவ்வீதியே இவ்வாறு முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இவ்வீதியின் மோசமான நிலை காரணமாகப் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அறுவடைக்காலங்களில் நெல் மூடைகளுடன் வரும் வாகனங்களும் உழவு இயந்திரங்களும் குடைசாய்ந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளதாகவும் விவசாய அமைப்பின் பிரதிநிதி தௌபீக் கவலை தெரிவித்தார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த. நவநீதன் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இவ்வீதியைப் புனரமைப்பதற்கான அனைத்து ஆரம்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இறுதித் தருவாயில் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துவரும் நிலையில், விவசாயிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தமக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் எத்தகைய சிரமமுமின்றித் தமது விவசாய நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்க அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரsது எதிர்பார்ப்பாகும்.
