ශ්රී ලංකා පුවත්: மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: கடிபட்டு 5 பேர் வைத்
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

ශ්රී ලංකා පුවත් අංශය: மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…
மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பகல் நேரங்களில் கூடத் தமது வீடுகளின் கதவுகளைப் பூட்டி வைத்துக்கொண்டு பெரும் அச்சத்துடனும் பயபீதியுடனும் வாழ்ந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாகக் கூட்டமாக ஊடுருவியுள்ள குரங்குகள், வீட்டுத் தோட்டங்களில் பலன் தரும் மா, பலா, கொய்யா மற்றும் மாதுளை உள்ளிட்ட மரங்களிலுள்ள பழங்களைத் தின்று சேதப்படுத்துவதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் சீட்டுகளையும் உடைத்துத் தொடர் அட்டகாசம் புரிந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் இப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் குரங்குக் கடிக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குரங்குகள் தொடர்ந்தும் மனிதர்களை அச்சுறுத்தி வருவதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பகல் நேரங்களிலும் வீடுகளைப் பூட்டி வைத்துக்கொண்டு வாழ வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளதாகப் பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றபோதும் இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, குரங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மைப் பாதுகாக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமாங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
