ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விசேட பரிசோதனை

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 ඉල් 11, බදාදා
2962 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விசேட பரிசோதனை
நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விசேட பரிசோதனை நடவடிக்கை! (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதனின் ஆலோசனைக்மைவாக, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார அதிகாரி பிரிவில் அமைந்துள்ள…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதனின் ஆலோசனைக்மைவாக, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார அதிகாரி பிரிவில் அமைந்துள்ள விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நுளம்பு கட்டுப்பாடு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விசேட பரிசோதனையின்போது பாடசாலை வளாகங்கள், நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்குச் சாதகமான சூழல்கள் என்பவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. நுளம்புப் பெருக்குக் காணப்பட்ட மற்றும் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் பதிவான இப்பாடசாலைக்கு உடனடியாகச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அதனைச் சீரமைப்பதற்கான அவகாசமும் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் டெங்கு நோய் தடுப்பு முறைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் நுளம்பு பெருக்கத்தைத் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்தனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්