ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியர் மீது தாக்குதல்: காவலாளி கைது!

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 මැදින් 25, බදාදා
4128 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியர் மீது தாக்குதல்: காவலாளி கைது!
மட்டு போதனா வைத்தியசாலையில் ஊழியர் மீது தாக்குதல்: காவலாளி கைது! (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: ​மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்தாளர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். ​நேற்று…

​மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்தாளர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

​நேற்று (24) செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தாளர் ஒருவர், தனது வாகனத்தை வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த காவலாளிகள் வாகனத்தை நிறுத்த அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

​வாக்குவாதம் முற்றிய நிலையில், மூன்று காவலாளிகள் இணைந்து மருந்தாளர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்த மருந்தாளர், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​​சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இரு காவலாளிகள் தலைமறைவாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குரிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්