ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2025 බිනර 1, සඳුදා
3973 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ​இச்சம்பவம் காலை 10.30…

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் வெவ வீதியில் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த குழுவொன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், பின்னர் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

​துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றவர் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு குற்றவாளிகள் ரிவோல்வர் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​விசாரணையாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் நடந்துகொண்டிருக்கும் உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பியுள்ளனர். பலியானவருக்கு செப்டம்பர் 9ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.

​சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්