ශ්‍රී ලංකා

ශ්‍රී ලංකා පුවත්: களுவாஞ்சிகுடி பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு: 46

තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

වාර්තාකරු: කර්තෘ මණ්ඩලය•2026 ඉල් 15, ඉරිදා
5520 නැරඹුම්•මූලාශ්‍රය: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
ශ්‍රී ලංකා පුවත්: களுவாஞ்சிகுடி பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு: 46
களுவாஞ்சிகுடி பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு: 467 இடங்களில் சோதனை; 8 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! (තායග තමිල්)
බෙදාහරින්න:WhatsAppFacebookX (Twitter)Telegram

ශ්‍රී ලංකා පුවත් අංශය: தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு மற்றும் பட்டிருப்பு…

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு மற்றும் பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை (13.11.2026) முன்னெடுக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படையினர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், டெங்கு கள உதவியாளர்கள் மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இணைந்து இச்செயற்திட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அப்பகுதியிலுள்ள வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமயஸ்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கையின்போது மொத்தமாக 467 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் நுளம்பு பெருகக்கூடிய ஆபத்தான சூழலை வைத்திருந்த 08 பேருக்கு எதிராகக் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனனன் தெரிவித்தார். மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

TAGS:
#ශ්‍රී ලංකා#තායග තමිල්#පුවත්