ශ්රී ලංකා පුවත්: 2027 வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; ரூ.
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

ශ්රී ලංකා පුවත් අංශය: 2027 ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் (Budget 2027) நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (நவம்பர் 12) பிற்பகல்…
2027 ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் (Budget 2027) நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (நவம்பர் 12) பிற்பகல் 1.30 மணிக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாக இது அமைகின்றது.
பொருளாதார உறுதிப்பாட்டு இலக்கிலிருந்து பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றியமைக்கும் அபிவிருத்தியை நோக்கிய மாற்றமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, நாட்டின் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக சுமார் 2,000 பில்லியன் ரூபா மூலதனச் செலவின ஒதுக்கீடுகள் (Capital Allocations) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இணைந்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி மீளாய்வு செய்திருந்தார்.
இன்றைய வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, நவம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்குக் குழுநிலை விவாதம் நடைபெற்று, டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாகப் பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய பொருளாதாரத் திட்டங்கள், வரி நிவாரணங்கள் மற்றும் மக்கள் நலன்சார் அறிவிப்புகள் உள்ளடங்கிய இந்த வரவு செலவுத் திட்ட உரை மீது நாடளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
