ශ්රී ලංකා පුවත්: நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட
තායග තමිල් පුවත් සේවය විසින් වාර්තා කරන ලද විශේෂ පුවත.

ශ්රී ලංකා පුවත් අංශය: மாணவர்களின் கலை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு…
மாணவர்களின் கலை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித்திரக் கண்காட்சி 2026’ இன்று (11) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பாடசாலை அதிபர் சீ.எம். நஜீப் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாகக் கல்முனை கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாசா, சிரேஷ்ட அளவையியல் உத்தியோகத்தர் இஸ்மாயில் முக்தார், கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பி.எம்.ஜே. மாயிதா, நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி றிஷான் (ஹாமி) ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அத்துடன் பாடசாலைப் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பாடசாலை ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மாணவர்களால் வரையப்பட்ட பல வண்ணமயமான இயற்கை ஓவியங்கள், கட்டிடக் கலைக் கோலங்கள் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வுக்கு வருகை தந்த கௌரவ அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் சித்திரப் படைப்புகளைப் பார்வையிட்டு அவர்களின் திறமைகளைப் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
