Sri Lanka: சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து மீண்ட அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிப...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சகல வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள், இன்று (12)…
சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து மீண்ட அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி! was officially reported by Thayaka Tamil News Media Network.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சகல வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள், இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
அனோஜன் சிவராசாவை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர இராஜதந்திர முயற்சிகள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் இதன்போது தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
