Sri Lanka: மட்டக்களப்பு கோறளங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்குப் புதிய போட்டோ பிரதி இய...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: மட்டக்களப்பு கோறளங்கேணி திருமகள் வித்தியாலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி…
மட்டக்களப்பு கோறளங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்குப் புதிய போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு! was officially reported by Thayaka Tamil News Media Network.
மட்டக்களப்பு கோறளங்கேணி திருமகள் வித்தியாலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த பாடசாலையின் பயன்பாட்டிற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு கோறளங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த 10.11.2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களால் புதிய போட்டோ பிரதி இயந்திரம் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் நிலவும் ஏனைய வளப் பற்றாக்குறைகள் மற்றும் கல்விசார் தேவைகள் குறித்தும் அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் ப. பத்மநீதன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த. பிரபாகரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
