Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் இணைந்த விசேட திட்...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Monday, November 9, 2026
6462 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் இணைந்த விசேட திட்...
கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் இணைந்த விசேட திட்டம் ஆரம்பம்! (Thayaka Tamil)

Sri Lanka News Desk: கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்த விசேட…

கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரச நிறுவனங்கள் இணைந்த விசேட திட்டம் ஆரம்பம்! was officially reported by Thayaka Tamil News Media Network.

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்த விசேட கூட்டு வேலைத்திட்டம் (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், நீர் வடிந்தோடலுக்கு ஏற்படும் தடைகளை அகற்றி, கால்வாய்கள் மற்றும் வடிகான் அமைப்புகளைச் சீரமைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கொழும்பு வடக்கு, கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு, பொரளை, கொழும்பு மத்தி ஆகிய 5 பிரிவுகளை உள்ளடக்கி நீர் வடிந்தோட தடை நிலவும் 60 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிக வெள்ள அபாயம் கொண்ட இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இன்றையதினம் கள ஆய்வுகளும் தடைகளை அகற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாராஹேன்பிட்டி கிரிமண்டல மாவத்தை, பம்பலப்பிட்டி ஹெய்க் வீதி, வெள்ளவத்தை கொலிங்வுட் பிளேஸ், பராக்ரம் வீதி, குரே வீடமைப்புத் திட்ட வளாகம், கிருளப்பனை ஸ்டாஃபோர்ட் வீதி, கிருளப்பனை கால்வாய், பேஸ்லைன் பிரதான வீதியை அண்டிய ஹீன கால்வாய், தெமட்டகொட ஆராம வீதி, நியூ பஸார் பிளேஸ், டி மெல் வத்தை மற்றும் பரடைஸ் வீதி உள்ளிட்ட பல இடங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் இலங்கை இராணுவம், கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (06) கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தற்காலிகத் தீர்வுகளுக்கு அப்பால் முறையற்ற நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் பராமரிப்பின்மையால் ஏற்பட்டுள்ள வடிகானமைப்புப் பிரச்சினைகளுக்கு நீண்டகால நிலையான தீர்வுகளை வழங்குவதே இதன் இலக்காகும்.

இக்களப்பணிகளை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி சுனில் வட்டகல, பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka