Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்க இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எ...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Friday, November 6, 2026
6377 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்க இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எ...
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்க இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கும்: இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார் – எம்பி சிறிநாத்! (Thayaka Tamil)

Sri Lanka News Desk: இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவற்றுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்க இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கும்: இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார் – எம்பி சிறிநாத்! was officially reported by Thayaka Tamil News Media Network.

இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவற்றுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய நிதியமைச்சர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கடந்த வாரம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்ட நான், டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இனசுத்திகரிப்பு குறித்த ஒப்பீட்டு ஆய்வு மாநாட்டில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்டேன். என்னுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இசுவிஜயத்தின் போது, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வன்னிஅரசு, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் இந்திய நிதியமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.”

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என்பதை இந்தியத் தரப்பிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் தீர்வு இழுத்தடிப்பு, காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள், 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமற்ற தன்மை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் மீள்குடியேற்றம் அல்லது அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிநாத் எம்.பி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், இராஜதந்திர ரீதியில் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய நிதியமைச்சர் தமக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka