Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka News: தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Tuesday, October 21, 2025
5164 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka News: தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி (Thayaka Tamil)

Sri Lanka News Desk: இலங்கையில் தங்கத்தின் விலையில் நேற்று (18) 20,000 ரூபா வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலமாக புதிய உச்சங்களைத் தொட்டு…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி was officially reported by Thayaka Tamil News Media Network.

இலங்கையில் தங்கத்தின் விலையில் நேற்று (18) 20,000 ரூபா வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலமாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு, நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

செட்டித்தெரு சந்தை நிலவரம்:

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நேற்று (18) தங்கத்தின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:

தங்கம் வகை விலை (ரூபா) (அக். 17) விலை (ரூபா) (அக். 18) விலை வித்தியாசம்

ஒரு பவுண் 24 கரட் 410,000/- 390,000/- 20,000/- குறைவு

ஒரு பவுண் 22 கரட் 379,200/- 360,800/- 18,400/- குறைவு

நேற்று முன் தினம் 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை, நேற்று 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாகக் குறைந்துள்ளது.

இதேபோன்று, நேற்று முன் தினம் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாவாக இருந்த ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையும், நேற்று 3 இலட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாவாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணயச் சந்தை மற்றும் உள்ளூர் டொலரின் பெறுமதி ஆகியவற்றின் மாற்றங்களே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka