Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: வாழைச்சேனை கடதாசி ஆலையில் இடம்பெற்ற மர நடுகை திட்டம்...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Tuesday, October 21, 2025
5101 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: வாழைச்சேனை கடதாசி ஆலையில் இடம்பெற்ற மர நடுகை திட்டம்...
வாழைச்சேனை கடதாசி ஆலையில் இடம்பெற்ற மர நடுகை திட்டம் (Thayaka Tamil)

Sri Lanka News Desk: ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு…

வாழைச்சேனை கடதாசி ஆலையில் இடம்பெற்ற மர நடுகை திட்டம் was officially reported by Thayaka Tamil News Media Network.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு லேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ஐம்பது ஏக்கர் காணியில் முந்திரிகை, கிளிசரியா, மகோகனி போன்ற பயன்தரும் மரங்களை நடும் திட்டத்தில் முதற்கட்டமாக ஐந்து ஏக்கர் காணியில் முந்திரிகை உற்பத்தி செய்யும் திட்டத்தில் முந்திரிகை கன்றுகளை நடும் திட்டம் நேற்று சனிக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடதாசி ஆலையின் தவிசாளரும் பொறியலாளருமான ஆர்.எம்.எஸ்.புபாலி ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் பொறியலாளர்களுமான டபள்யூ.ஏ.குலதிலக, டபள்யூ.ஏ.நிஹால் பெரேரா, கே.ஜினதாச, என்.ஏ.நந்தசேன, கடதாசி ஆலையின் மனிதவள முகாமையாளர் காயத்திரி எக்கநாயக்க, வாழைச்சேனை கடதாசி ஆலையின் பிரதம இணைப்பதிகாரி எஸ்.அம்பிகாவதி மற்றும் கடதாசி ஆலையின் உத்தியோத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka