Sri Lanka: யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கோர வாகன விபத்து: தந்தையும் 9 வயது மகனும் உயிரிழ...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும் அவரது 9…
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கோர வாகன விபத்து: தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு; வேன் சாரதி கைது! was officially reported by Thayaka Tamil News Media Network.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு கனகம்புள்ளியடி சந்தி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதில் பயணித்த சிறுவனும் உடனடியாக மீட்கப்பட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மட்டுவில் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், அவரது 9 வயது மகனுமே இவ்வாறு அகால மரணமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்திற்கான காரணம் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சாவகச்சேரி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
