Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
Sri Lanka

Sri Lanka: வீரவிலவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: நால்வர் பலி; 40 ...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Reporter: Editorial Desk•Wednesday, March 18, 2026
3790 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
Sri Lanka: வீரவிலவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: நால்வர் பலி; 40 ...
வீரவிலவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: நால்வர் பலி; 40 பேர் படுகாயம் (Thayaka Tamil)

Sri Lanka News Desk: ​அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று (18) மதியம் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர்…

வீரவிலவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: நால்வர் பலி; 40 பேர் படுகாயம் was officially reported by Thayaka Tamil News Media Network.

​அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று (18) மதியம் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

​​இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

​கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும் அதிவேகமாக மோதியுள்ளன.

இவ் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

​படுகாயமடைந்த 40 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​​விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்துகளின் அதீத வேகம் அல்லது கவனக்குறைவு விபத்திற்குக் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

TAGS:
#Sri Lanka#Thayaka Tamil#News#Sri Lanka