Sri Lanka: அம்பாறை வீரமுனை படுகொலையின் 35வது நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering Sri Lanka.

Sri Lanka News Desk: 1990ல் அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல் நேற்றைய தினம் (12) வீரமுணை நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியில்…
அம்பாறை வீரமுனை படுகொலையின் 35வது நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு was officially reported by Thayaka Tamil News Media Network.
1990ல் அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல் நேற்றைய தினம் (12) வீரமுணை நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, தீபச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அஞ்சலி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள், வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும், வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மக்கள் தஞ்சம் புகுந்து தங்கியிருந்த பகுதிக்கு வந்த மர்மக் குழுவினரால் பல நூறு அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்கள்.
இது கிழக்கு மாகாணத் தமிழர் மீதான 1990களின் தொடக்ககால வன்முறைகளில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நேற்றைய அஞ்சலி நினைவேந்தலின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஷ்வரன், கரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் ஜெயசிறில் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்கள், வீரமுணை மண்ணில் உயிர் நீத்த உறவுகளின் உறவினர்கள் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டு தீபச்சுடர், மலரஞ்சலி நினைவுவணக்கம் செலுத்தினர்கள்.





