Thayaka Tamil Seithigal - தாயக தமிழ் செய்திகள்
World

World: பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள்: வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நாடு மு...

Official news report from Thayaka Tamil Editorial Desk covering World.

Reporter: Editorial Desk•Friday, November 6, 2026
5261 Views•Source: Thayaka Tamil (thayakatamil.com)
Read this story in other languages:
World: பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள்: வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நாடு மு...
பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள்: வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாபெரும் தொழிற்சங்கப் பணிநிறுத்தம் மற்றும் போராட்டங்கள்! (Thayaka Tamil)

World News Desk: பிரான்ஸ் நாட்டில் விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதிய உயர்வு மற்றும் கல்வி நிலைமைகளை மேம்படுத்தக் கோரி, தொழிற்சங்கங்களும் மாணவர்களும் இணைந்து நாடு…

பிரான்ஸில் கொதித்தெழுந்த மக்கள்: வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாபெரும் தொழிற்சங்கப் பணிநிறுத்தம் மற்றும் போராட்டங்கள்! was officially reported by Thayaka Tamil News Media Network.

பிரான்ஸ் நாட்டில் விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதிய உயர்வு மற்றும் கல்வி நிலைமைகளை மேம்படுத்தக் கோரி, தொழிற்சங்கங்களும் மாணவர்களும் இணைந்து நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களையும் பணிநிறுத்தங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 5 இலட்சம் முதல் 7 இலட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 80,000 பேர் வரை திரள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, முறையான வரிச் சீர்திருத்தம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, போராட்டங்களின் போது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பாதுகாப்புக்காக 70,000 பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாணவர் போராட்டங்களின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளதால், தற்போது பிரான்ஸ் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGS:
#World#Thayaka Tamil#News#Sri Lanka