World: ஐரோப்பாவை அச்சுறுத்தும் மர்மப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்: ஒரே நாளில் 16 நா...
Official news report from Thayaka Tamil Editorial Desk covering World.

World News Desk: ஐரோப்பிய நாடுகளின் விமானப் போக்குவரத்திற்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு…
ஐரோப்பாவை அச்சுறுத்தும் மர்மப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்: ஒரே நாளில் 16 நாடுகளைச் சேர்ந்த 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! was officially reported by Thayaka Tamil News Media Network.
ஐரோப்பிய நாடுகளின் விமானப் போக்குவரத்திற்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதல் ஐரோப்பிய வான்பரப்பில் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பதிவாகியிருந்த போதிலும், நவம்பர் 5ஆம் திகதி பல நாடுகளின் விமானச் சேவைகள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அயர்லாந்தின் டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது அவசரமாகப் பிரான்சிலுள்ள விமானப்படைத் தளமொன்றுக்குத் திருப்பி விடப்பட்டது. குறித்த விமானத்தில் பயணம் செய்த 151 பயணிகளும் ஆறு பணியாளர்களும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று, பல்கேரியாவில் மூன்று ரயன்எயார் விமானங்களுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், லண்டன், கோபன்ஹேகன் மற்றும் மட்ரிட் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து செர்பியாவுக்குச் சென்ற விமானங்களும் இது போன்ற கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டன. ஐரோப்பிய வான்வெளியில் தொடரும் இந்த மர்ம அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி விரிவாக ஆராய்ந்து வருகிறது.
