கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பறகத் பள்ளிவாசல் வீதியில் இன்று (14) செவ்வாய்க்கிழமை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் ரீ.எல்.எம்.சித்தீக் அவர்கள் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சிரமதானம் வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர் ரீ.எல்.எம்.சித்தீக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு வீதியோரங்களில் காணப்பட்ட குப்பை கூழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.



