அம்பாறை மாவட்டம் காரைதீவு கிராமத்தில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.17 மணி அளவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்துள்ளது.
காரைதீவு மேற்கே உள்ள வயல் பகுதியில் இருந்து திடீரென உள் நுழைந்த தனியன் யானை ஒன்று கண்ணகி அம்மன் ஆலய கவடா வளவிற்குள் புகுந்து பின் மதிலை உடைத்துக் கொண்டு ஊர்மனைக்குள் புகுந்தது.
ஊர் குடிமனைப்பகுதியில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளையில் ஐந்து வீடுகளின் எல்லை மதில்களை உடைத்து சந்திரகுமார் என்பவரின் களஞ்சிய அறையிலிருந்த நெல்லை உறிஞ்சிக் குடித்துள்ளது.
அப்பகுதியில் இருந்த வாழை, தென்னை மரவள்ளி போன்ற பயன் தரும் மரங்களை சரித்து உண்டு துவம்சம் செய்துள்ளது.
மக்கள் செய்வதறியாது உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநிசியில் ஓட்டம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.


