ஏறாவூர்பற்று பிரதேச சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் கொடுவாமடு பகுதியில் அமைந்துள்ள திண்மக் கழிவு சேகரிப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மக்களின் சுகாதார நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் மண் படலம் இடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் 18.10.2025 முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இவ் வேலைத்திட்டத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன்,
வேல் பரமதேவா, சி.வவானந்தன், சி.நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


