குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்படும் சொத்துக்களை விசாரிக்க, ‘குற்றச் செயல்களின் வரும்படிகள் விசாரணைப் பிரிவு’ (Proceeds Of Crime Investigation Division) நேற்று (அக்டோபர் 20) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் இது திறந்து வைக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க குற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான சட்டமூலம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்து, போதைப்பொருள் வர்த்தகம் போன்ற திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரிவின் நோக்கமாகும். SSP அசங்க கரவிட்ட இதன் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


