கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தின் 151வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரான் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொடிய டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து என்னை பாதுகாப்போம்
“டெங்கு அற்ற கிராமம்” எனும் தொனி பொருளில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் பாடசாலை சமூகம், கோறளைப்பற்று பிரதே சபை, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் இணைந்து பாடசாலை சூழல், கிராமங்களில் டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றினை தூய்மைப்படுத்துதல் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் மழை காலம் என்பதனாலும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் உள்ளதனாலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் இணைந்து கிரான் கிழக்கு மற்றும் மேற்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு உரிமையாளர்களிடம் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வீட்டுச் சூழலில் டெங்கு நுளம்பு பரவக்கூடியதாக இருந்த குப்பைகள் ஏனைய பொருட்களை அகற்றி பிரதேச சபை வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட்டது .
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள், மதகுருமார், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





