கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அனர்த்த முகாமைத்துவக் குழுக்கூட்டம் இன்று (14) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்த அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையிலும் அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
