மட்டு வவுணதீவு வாதகல்மடுவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

மட்டு வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று (20) அதிகாலை குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இச்சம்பவத்தில் மரணமானவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் வயது 58 என்பவராவார்.

சம்பவ இடத்திற்கு வந்த வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.

Advertisement

இதே வேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தயின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படதுடன் இதன் முற்பணமாக

மரண சடங்கிற்கு இறந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையினை கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement