ரன்வீர் சிங் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவான ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்ததுடன், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக அக்ஷய் கண்ணாவின் மிரட்டலான வில்லன் நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. (தொடர்ந்து வாசிக்க…)
துரந்தர் 2 திரைப்படத்தின் பிரீமியர் பாக்ஸ் ஆபிஸ் விபரங்கள் வருமாறு:
நேற்று மாலை உலகளவில் திரையிடப்பட்ட துரந்தர் 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சிகள் மூலம் மட்டுமே இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இந்தியத் திரையுலகில் ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரவிருக்கும் நாட்களில் இப்படம் பல புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள நிலையில், முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமான முறையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் திரையரங்குகளில் இருந்து வரும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே எரிபொருள் வரிசைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களில் இருக்கும் மக்களுக்கு, இவ்வாறான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் ஒரு சிறந்த மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.