இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்து ட்ரம்ப் “நீங்கள் ஒரு அழகான பெண்” எனப் பாராட்டு – இணையத்தில் விமர்சனம்!
எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அமைதி உச்சிமாநாட்டில், ட்ரம்ப் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” என்று தெரிவித்தார்.
மேலும், கிண்டலாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், “இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்” என்றும் கூறினார்.
இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன், எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
உலகத் தலைவர்கள் மத்தியில் ட்ரம்ப் இவ்வாறு இத்தாலி பிரதமர் குறித்து தனிப்பட்ட முறையில் பேசியது தற்போது இணையத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
#WorldNews#BreakingNews#Trump#Meloni#GazaPeaceSummit#சர்ச்சை#டிரம்ப்#மெலோனி#உலகச்செய்திகள்



All reactions:
11