யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி பின்னர் பதவி உயர்வு பெற்றுச் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் வெள்ளிக்கிழமை (17) அன்று அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளர் மற்றும் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.