கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை அகற்றும் பணி இன்று (16) மேற்கொள்ளப்பட்டது.
கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, சபையின் உத்தியோகத்தர் ஏ.ஜி. றபீக் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்றன.
இதன் போது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீராக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச சபையின் இந்தச் செயற்பாடு, வீதிப் பாவனையாளர்களின் பாதுகாப்பையும் இலகுவான போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.


