ஓட்டமாவடி பிரதேச சபையினால் வடிகான்கள் துப்பரவு நடவடிக்கை துரிதமாக முன்னெடுப்பு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வடிகான்களும் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களின் உத்தரவின் பேரில் துரிதமாக துப்பரவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அனைத்து வட்டாரங்களிலும் இப்பணியினை முன்னெடுக்குமாறு பிரதேச சபை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்பாடும் அசெளகரியங்களைத் தடுக்கவும் டெங்கு போன்ற உயிர்கொல்லி நோய்களிலிருந்து பிரதேச மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் குறித்த தூர்வாரும் நடவடிக்கை தவிசாளரின் ஆலோசனையில் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், மேலதிகமாக தூர்வாரப்பட வேண்டிய இடங்கள் அடையாளங்காணப்படுமிடத்து தவிசாளருக்கோ அல்லது தனது வட்டார உறுப்பினர்களூடாகவோ அறியத்தருமிடத்து நடவடிக்கை எடுக்கப்படுமென தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன், துரிதமாக வடிகான்கள் தூர்வாரும் இடங்களை நேரடியாகப் பார்வையிட்ட தவிசாளர், அதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன், முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் பிரதேச மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது மீராவோடை மேற்கு வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின் அவர்களும் கலந்து கொண்டார்.

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement